அமெரிக்காவில் ஏற்ப்பட்டுள்ள அவசர நிலை

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதோடு முன் எச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கவர்னர் கேத்தி ஹோசுல் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது.

வியாழக்கிழமையன்று ஒரே நாளில் 6,295 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 3.45 சதவீதமாக உள்ளது. 28 பேர் ஒரே நாளில் இறந்தும் உள்ளனர்.

ஆஸ்பத்திரிகளில் சேர்க்கையும் அதிகரித்து வருகிறது. சராசரியாக ஒரு நாளில் 300-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா மேலும் பரவுவதைத் தடுக்க அந்த மாகாணத்தில் பேரழிவு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாகாண கவர்னர் கேத்தி ஹோசுல் பிறப்பித்துள்ளார்.

இந்த மாகாணத்தில் புதிய வகை வைரசான ஒமிக்ரான் கண்டறியப்படவில்லை. புதிய வைரஸ் உருவாகி நியூயார்க்கில் முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கவர்னர் கேத்தி ஹோசுல் கூறி உள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதோடு முன் எச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.