ஒமிக்ரோன் வைரஸ் தொடர்பில் அவுஸ்திரேலியாவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது உலகளாவிய ரீதியல் பாரிய அச்சுறுத்தல் நிலையை ஏற்படுத்தி இருக்கும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுடன் அவுஸ்திரேலியாவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தென் ஆபிரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வருகைத் தந்த இரண்டு பயணிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் ஊடாக வைரஸ் தொற்று பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, ஒமிக்ரோன் வைரஸ் அவுஸ்திரேலியாவிற்கு பிரவேசித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதையடுத்து, தென் ஆபிரிக்க நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வருகைத் தர நேற்றிரவு முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவில் புதிய கொவிட் அலையொன்று உருவாவதனை தவிர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் அடையாளம் காணப்பட்ட இரண்டு ஒமிக்ரோன் தொற்றாளர்களும், ஹோட்டல் ஒன்றில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று, குறித்த தொற்றாளர்கள் வருகைத் தந்த விமானத்தில் பயணித்த பயணிகளும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அவுஸ்திரேலியா புதிய சுகாதார வழிகாட்டிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், கடுமையாக சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.