வவுனியா மேலதிக அரச அதிபருக்கு கொரோனா…

வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

குறித்த அதிபருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்புடையவர்களையும் தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.