மேல் மாகாண மக்களுக்கான அறிவித்தல்!

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகள் தொடர்பில் மேல் மாகாணத்தில் உள்ள மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான விஷேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாத கடைசியில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் ஊடாக இது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்தாக மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.