நாட்டில் நாளுக்கு நாள் ஒவ்வொரு பொருட்களின் விலைகளும் வரலாறு காணாத அளவில் பாரிய உயர்வைக் கண்டு வருகிறது.
அதன்படி தற்போது ஒரு கிலோகிராம் பயறின் விலையானது சுமார் 225 ரூபாவாக சதொச விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் விவசாயிகளிடம் இருந்து பெரும் ஒரு கிலோ பயறானது 450 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்த அவர் கூறியதாவது,
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அனைத்து சதொச கடைகளிலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். சதொச கடைகளில் 100 ரூபாவிற்கும் குறைவான விலையில் ஒரு கிலோகிராம் நாட்டரிசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீனி அதிக விலைக்கு விற்கப்பட்டாலும், சதொச கடைகளில் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 122 ரூபாவிற்கும், சிவப்பு சீனி கிலோகிராம் 125 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன் சுட்டிக்காட்டினார்.