மட்டக்களப்பில் கஞ்சா வளர்த்த 19 வயது இளைஞன் கைது!

மட்டக்களப்பு பகுதியில் வீடொன்றில் பூச்சாடியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 19 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

மேலும் எதிர்வரும் 25ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி மட்டக்களப்பு தலைமையக போதை ஒழிப்பு பிரிவு பொலிஸார் குறித்த வீட்டினை சுற்றிவளைத்துள்ளனர்.

அதன்போதே வீட்டின் பூச்சாடி இரண்டில் 3 1/2 அடி மற்றும் 2 1/2 அடி உயரம் கொண்ட இரண்டு கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 19 வயது இளைஞன் ஒருவரைக் கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபரை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.