மோடிக்கு அழைப்பு விடுத்த ஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னெட் (Naftali Bennett) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை (Narendra Modi) தனது கட்சியில் இணைந்துகொள்ளும்படி அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

கிளாஸ்கோ நகரில் இடம்பெற்றுவரும் ஐ.நா.பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னெட் உள்பட உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஐ.நா.பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டிற்கு இடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) பல்வேறு நாட்டு தலைவர்களை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை (Naftali Bennett) இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இந்திய பிரதமர் மோடியிடம் கைகுலுக்கி பேசிய இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட், ‘நீங்கள் (நரேந்திரமோடி) இஸ்ரேலில் மிகவும் பிரபலமான நபர்… வாருங்கள் எனது கட்சியில் இணைந்துகொள்ளுங்கள்’ என்று கூறினார்.

இந்த சந்திப்பில், அங்கு சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது. இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை இந்திய பிரதமர் மோடி சந்திப்பது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டிற்கு இடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) பல்வேறு நாட்டு தலைவர்களை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.