சுவிட்சர்லாந்தில், கொரோனா தடுப்பூசி பெற்ற பலருக்கு கொரோனா தொற்று!

சுவிட்சர்லாந்தில், கொரோனா தடுப்பூசி பெற்ற பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுவரும் விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில், கொரோனா தடுப்பூசி பெற்ற பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுவருகிறார்கள்.

அதாவது, சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டவுடன், முதன்முதலாக தடுப்பூசி பெற்றுக்கொண்டார்கள் பலர். தற்போது, அவர்களுடைய தடுப்பூசியின் செயல்திறன் குறையத் தொடங்கியுள்ளதால் அவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாவதாக கருதப்படுகிறது.

இதற்கிடையில், இன்னமும் பூஸ்டர் தடுப்பூசிக்கு சுவிஸ் மருந்துகள் ஒழுங்குமுறை அமைப்பு அங்கீகாரம் வழங்காததால் சுவிஸ் மக்கள் கோபமடைந்துள்ளார்கள். அந்த அமைப்பின் தலைவரோ, தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்தால் மட்டுமே அங்கீகாரம் வழங்க முடியும் என்கிறார்.

இன்னொருபக்கம், மற்ற நாடுகள் சிலவற்றில் செய்யப்படுவதுபோல், இரண்டு வெவ்வேறு நிறுவன தயாரிப்பான தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தவும் நிபுணர்கள் ஆலோசித்துவருகிறார்கள்.