விஜய் டிவியின் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் ஷிவானி நாராயணன். அந்த சீரியலில் இருந்து வெளியேறிய அவர் ஜீ தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
மீண்டும் பகல் நிலவு சீரியலின் மூலம் தனது பழைய நிலையை அடைந்தார். திடீரென்று அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவர் பாலாஜி முருகதாஸுடன் ரொமான்ஸ் செய்த காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னர் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பின் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஷிவானி மிகவும் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இதற்கு காரணம் அவர் முன்பு போல் கவர்ச்சி காட்டாமல் கொஞ்சம் நாகரிகமான உடைகளுடன் போட்டோஷூட் நடத்துவது தான்.
அத்துடன் இவரது 4 மணி போட்டோஷூட்டும் மிஸ் ஆகிவிட்டது. இது ரசிகர்களை மிகவும் சோகத்திற்கு ஆளாக்கியுள்ளது. இந்த நிலையில், தற்போது நடிகை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓயோ ரூம் விளம்பரத்திற்காக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள் அவரை பலவாறு விமர்சித்து வருகின்றனர்.
View this post on Instagram







