சிறுவர்கள் உதவியுடன் கணவனை கொன்ற மனைவி

கர்நாடக மாநிலம் சிவமொக்காவைச் சேர்ந்த நாகராஜ், அதே பகுதியை சேர்ந்த மம்தா என்பவரை காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

நாகராஜ் குடும்பத்துடன் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுக்கா அம்பாரு மூடாஜே விவேக் நகரில் வசித்து வந்தார். நாகராஜ்க்கு மது குடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

மதுவை வாங்கி வந்து வீட்டிலேயே வைத்து தினமும் குடித்திருக்கிறார். இதனால் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென்று நாகராஜ் தூக்கில் சடலமாக தொங்கியிருக்கிறார். போலீசுக்கு போன் செய்த நாகராஜ் மனைவி, கணவர் மது குடித்துவிட்டு மன உளைச்சலில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று புகார் அளித்தார்.

உடனே விரைந்து வந்தனர் போலீசார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு வைத்தனர். இதற்குள் உறவினர்கள் அனைவரும் வந்து விட்டனர் .

பிரேத பரிசோதனைக்கு பின்னர் நாகராஜன் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்போது நாகராஜ் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. அவர் இறப்பதற்கு முன்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு மனைவியும் மேலும் சிலரும் சேர்ந்து தாக்கினார்கள் என்று புலம்பி இருக்கிறார். இதனால் நாகராஜை அடித்து கொலை செய்திருக்கிறார்கள் என்று உறவினர்கள் சந்தேகித்தனர்.

நாகராஜின் கழுத்தில் இருந்த காயங்களும் அதை உறுதிப்படுத்தின. இதையடுத்து மம்தாவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தை கணவரை கண்டித்தார்.

அவர் கடுமையாக கண்டித்தது அவர் இடையூறாக இருப்பதாக நினைத்து அவரை தீர்த்துக் கட்டி விட்டேன் என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார். கடந்த 19ஆம் தேதி நடந்த இந்த கொலை வழக்கு இருந்த சில சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் இரண்டு சிறுவர்களும் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றன மம்தா உட்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.

நாகராஜன் கொலை செய்வதற்கும் அவரின் உடலை தூக்கில் தொங்க விடுவதற்கும் உதவியாக குமார், தினகரன் மேலும் இரண்டு சிறுவர்கள் மம்தாவுக்கு உதவி செய்திருக்கிறார்கள்.