வாகை சூடவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை இனியா , தனது முதல் படத்தில் விமலுடன் ஜோடி சேர்ந்த நடிகை இனியா அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.
இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கான அங்கீகாரம் சரிவர கிடைக்கவில்லை . தமிழில் படவாய்ப்புகளும் குறைய தொடங்கின.
சமீபத்தில் இவர் நடித்து வெளியான மலையாள படம் ‘மாமாங்கம்’. இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். தற்போது மாடர்ன் உடையில், கியூட் ஆகா போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ” modern -ன் dress -ல் ஒரு மஞ்ச காட்டு மைனா ” என்று அழகை வர்ணித்து சிம்மெண்ட் செய்து வருகின்றனர் .









