விசித்திரமாக பிறந்த கன்று குட்டியை தெய்வமாக வழிபடும் மக்கள்!

நவராத்திரி காலப்பகுதியில் நடந்த அதிசய சம்பவம் குறித்த பேச்சு சமூக ஊடங்களில் வைரலாகி வருகின்றது.

ஒடிசாவின்- நப்ரங்க்பூர் மாவட்டத்தில் குமுளி பஞ்சாயத்தில் உள்ள பிஜப்பூர் கிராமத்தில் பசுமாடு ஒன்று இரண்டு தலைகள் மற்றும் மூன்று கண்களுடன் கன்றுக் குட்டியை ஈன்றுள்ளது.

விவசாயியான தனிராமி என்பவரின் வீட்டில் இந்த கன்றுக் குட்டி நவராத்திரியின் போது பிறந்துள்ளதால் பொதுமக்கள் அனைவரும் துர்க்கை தெய்வமாக வழிபட தொடங்கியுள்ளனர்.


இதேவேளை, பிறந்த கன்றுக்குட்டி இரண்டு தலைகளுடனும்,மூன்று கண்களுடனும் இருப்பதால் அதன் தாய் பசு இக்கன்றுக் குட்டிக்கு உணவு அளிக்க முடியாமல் தவிக்கிறது.

கன்றுக்குட்டி தாயிடம் இருந்து பால் குடிப்பதில் சிக்கல் உள்ளதால், வெளியில் இருந்து பால் வாங்கி அக்கன்றுக்கு உணவளிக்க வேண்டியதாக இருப்பதாக தனிராமி தெரிவித்துள்ளார்.

இந்த அதிசய கன்று குட்டியின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.