வடமேல் மாகாணத்தில் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) மகனான யோஷித ராஜபக்ஷ (Yoshitha Rajapaksa) போட்டியிடுவது சவால் இல்லை என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
“வடமேல் மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவன் நான்” மக்கள் அன்றும் இன்றும் என்னை நன்றாக நடத்துகிறார்கள்.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் என்னுடைய மக்கள் என்னை நன்றாக நடத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று மேலும் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்தார்.







