மட்டக்களப்பு அரச ஊழியர்களுக்கு நடந்த அட்டூழியம்!

மட்டக்களப்பு மாநகரசபையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்தகொள்ளவில்லையென்பதற்காக தம்மை பழிவாங்கும் செயற்பாடை முன்னெடுப்பதாக மாநகரசபையின் ஊழியர்கள் நேற்று மாநகரசபையின் முதல்வரிடம் முறையிட்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபையில் நேற்று முன்தினம் வாயில் கதவினை மூடி சிலர் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லையென்பதற்காக சுகாதார ஊழியர்கள் சிலரை மாநகர ஆணையாளர் அச்சுறுத்தியதாகவும் வேலை வழங்கப்படாது என விரட்டியதாகவும் மாநகரசபை முதல்வர் தி.சரவணபவனின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இதன்போது குறித்த ஊழியர்களுடன் மாநகரசபை முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துரையாடினர்.

இதன்போது வேலைத்தளத்திற்கு பொறுப்பாகவிருந்தவரும் அழைக்கப்பட்டு மாநகர முதல்வரினால் எச்சரிக்கப்பட்டதுடன் ஊழியர்களை பழிவாங்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டாம் எனவும் தெரிவித்தனர்.

அத்துடன் மாநகரசபையின் ஆணையாளரினால் எழுத்து மூலமான அறிவுறுத்தல்கள் கிடைக்காமல் எந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டாம் எனவும் இதன்போது ஊழியர் பொறுப்பு மேற்பார்வையாளருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அத்துடன் ஊழியர்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்கி தமது பணிகளை முன்னெடுக்குமாறும் முதல்வர் பணிப்புரைவிடுத்ததை தொடர்ந்து ஊழியர்கள் மிண்டும் கடமைக்கு சென்றனர்.