மாஸ்டரை முந்திய டாக்டர் படத்தின் வசூல்..!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் தான் டாக்டர்.

ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பை தொடர்ந்து வெளியான இப்படத்தை காண திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் நேற்றில் இருந்து தமிழ் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் டாக்டர் படம் குறித்து பதிவிட்டு வந்தனர். குறிப்பாக இயக்குனர் ஷங்கர் டாக்டர் படத்தை பார்த்துவிட்டு பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் பெரியளவில் வசூல் புரிந்துள்ள டாக்டர் திரைப்படத்தின் வெளிநாடு வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி டாக்டர் அமெரிக்காவில் – $135K , ஆஸ்திரேலியாவில் – $20K வசூல் செய்துள்ளது. மேலும் சிங்கப்பூர் பாக்ஸ் ஆஃபிஸில் டாக்டர் திரைப்படம் No.1 இடத்தில் உள்ளது.

மேலும் மாஸ்டர் அமெரிக்காவில் $130 K வசூலை செய்திருந்த நிலையில், அதனை முந்தியுள்ளது சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்.