டிராகன் பழத்தின் நன்மைகள்!

தற்பொழுது டிராகன் (Dragon fruit) பழங்களை பலரும் விரும்பி உண்கின்றபோதும், இதன் நன்மைகள் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதனை உண்பதனால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

டிராகன் பழங்களை தாய்லாந்து மற்றும் வியட்நாமில் உள்ள மக்களே அதிகமாக விரும்பு சாப்பிடுகின்றனர். இதன் தோற்றம் டிராகன் போல் இருப்பதால் இதற்கு டிராகன் பழம் (Dragon fruit) என பெயரிடப்பட்டதாம். இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்த இந்த பழம் அமெரிக்காவில் விளைந்து பின் கிழக்கு ஆசியாவில் அதிக அளவில் பயிரப்படும் பழமாக இருக்கிறது.

டிராகன் பழங்களை (Dragon fruit) உண்பதால் கிடைக்கும் நன்மைகள்

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு டிராகன் பழம் சிறந்த தேர்வு. ஏனெனில் இது கலோரிகள் இல்லாத பழம். இதன் விதைகள் பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது. இதில் உள்ள விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ உங்கள் அழகையும், சருமத்தையும் பாதுகாக்கிறது.

இரும்புச் சத்து, மெக்னீசியம் நிறைவாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. நீங்கள் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க டிராகன் பழம் உதவுகிறது. அதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கிறது.

டிராகன் பழம் நார்ச்சத்து நிறைந்த பழம். மலச்சிக்கல் பிரச்னை, செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு டிராகன் பழம் கைக்கொடுக்கும். இதயத்திற்கும் சிறந்த ஆற்றலை அளிக்கிறது. உங்கள் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதன் சதை வெண்ணெய் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பது மட்டுமன்றி பால் பொருட்களைபோல் இதுவும் புரோபயோடிக் பண்புகளை கொண்டுள்ளது. இதனால் வயிறு, குடல் மற்றும் உணவுக்குழாய் பிரச்னைகளை சரி செய்ய உதவுகிறது.

புற்றுநோய் செல்களை தடுக்கும் ஆற்றலும் இதில் உள்ளது. இந்த டிராகன் பழம் தற்போது பழக்கடைகள், மற்றும் சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கின்றன.

எனவே உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க இனி டிராகன் பழத்தையும் நீங்கள் விரும்பி உண்ணும் பழங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.