உலகம் முழுவதும் முடங்கிய பிரபல சமூக வலைத்தளங்கள்… வெளியான முக்கிய தகவல்!

திடீரென உலகம் முழுவதும் வாட்ஸ் அப், மூகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கியுள்ளதால் பயனாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பிரபல சமூக வலைதளங்களான மூகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பல இடங்களில் திடீரென முடங்கின.

மேலும் குறித்த பிரச்னையை சரி செய்ய மூகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களின் டெக் டீம் பெரும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் உலகம் முழுவதும் இந்த தொழில் நுட்பக் கோளாறு சீராகும் என கூறப்படுகிறது.