கொரோனா தொற்றால் மேலும் 893 பேர் பாதிப்பு!

இலங்கையில் இன்று இதுவரை 893 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் இதுவரை 518,775 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனாவில் இருந்து மேலும் 597 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனாவில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 458,085 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,964 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.