20 இலட்சத்தை நம்பி 50 ஆயிரத்தை இழந்த கிளிநொச்சி பெண்!

கிளிநொச்சியில் 20 இலட்ச ரூபாய் அதிர்ஷ்டத்தை நம்பி கிளிநொச்சியை சேர்ந்த பெண்ணொருவரும், யாழ்.மாநகரசபை ஊழியரும் 50 ஆயிரத்தை இழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

கிளிநொச்சியில் குடும்ப பெண் ஒருவரிடம் அழைப்பை மேற்கொண்ட நபர் ஒருவர் உங்களுக்கு 20 இலட்சம் ரூபா அதிஸ்டம் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதிஸ்டத்தின் திகதி நேற்றுடன் முடிவடைந்ததாகவும், அதனை மீண்டும் புதுப்பிக்க அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டுமென குடும்ப பெண்ணிடம் குறித்த (077…… ) எண்ணில் இருந்து அழைப்பு விடுத்த நபர் தெரிவித்துள்ளார்.

 

 

 

மேலும் குறித்த குடும்ப பெண்ணிடம் நாங்கள் கூறும் தொலைபேசி இலங்கங்களுக்கு 50 ஆயிரம் ரூபாவை eZ cash மூலம் பணத்தை அனுப்பிவிட்டு அருகிலுள்ள டயலொக் நிறுவனத்துக்கு செல்லுபடி கூறியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பெண் அவர்கள் கூறிய இடத்திற்கு சென்ற போது டயலொக் நிறுவனம் பூட்டப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் குறித்த பெண்ணிடம் அவர்கள் இலங்கை வங்கிக்கு அடையாள அட்டை, உள்ளிட்ட சில ஆவணங்களை குறிப்பிட்டு அவறின் பிரதிகளுடன் செல்லுமாறும் கூறியுள்ளனர்.

 

 

அவர்கள் கூறியதை நம்பிய குறித்த பெண் கடன் பெற்று அவர்கள் கொடுத்த 5 இலக்கங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் eZ cash மூலம் அனுப்பி விட்டு இலங்கை வங்கி சென்று அங்கிருந்து தனக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளுமாறு பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணும் பணத்தை அவர்கள் கொடுத்த 5 இலக்கங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் அனுப்பிவிட்டு வங்கி சென்று அங்கிருந்து 077….  இலகத்திற்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார்.

 

 

 

 

ஆனால் தொலைபேசி செல்லுபடியற்ற இலக்கம் என வந்துள்ளது. இதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்ட விடயத்தை அந்த குடும்ப பெண் உணர்ந்துள்ளார்.

இலங்கையில் இவ்வாறான ஒரு கூட்டம் மோசடிகளில் ஈடுப்பட்டு வருகிறது. மேலும் எதே ஒரு வழியில் பெண்ணின் பெயர் முகவரி அடையாள அட்டை இலக்கம் போன்ற தனிப்பட்ட தகவல்களை பெற்று நம்பிக்கைத் தரும் வகையில் பேசி ஏமாற்றிவருகின்றனர்.