பொன்னியின் செல்வன் அசத்தல் அப்டேட்.!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகின்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஒரு வருட காலமாகவே படப்பிடிப்பு தடைபட்டது. தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

ஐதராபாத்தில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு படத்தின் வேலைகள் ஆரம்பமாகி இருக்கிறது. இந்த காட்சிகளில் ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி, கார்த்திக் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை எவ்வளவு வேகமாக முடிக்க முடியுமோ அவ்வளவு வேகமாக முடிக்க வேண்டும் என்று நடிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

இதற்கு நடுவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று திரைத்துறையினரும், ரசிகர்களும் நினைக்கின்றனர். இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருவதால் படத்தின் ரகசியங்கள் எதுவும் கசியக்கூடாது என்று படக்குழு மிகவும் கவனமாக இருக்கிறது. அதிலும் நடிகர், நடிகைகள் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி விடக்கூடாது என்று அனைவரும் ரகசியம் காக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிவடைந்துவுட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் 2022 சம்மரில் வெளியாகபோவது குறிப்பிடத்தக்கது.