ரஞ்சன் ராமநாயக்க விடுதலை தொடர்பில் வெளியாகியுள்ள உண்மை தகவல்

சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற முன்னாள் எம்.பி ரஞ்சன் ராமநாயக்க விடுதலையாக உள்ளதாக எ பரவிவரும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாதென சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி கோட்டாபய இதுவரை அதுபற்றிய முடிவினை தனக்கு இன்னும் அறிவிக்கவோ அல்லது கலந்துரையாடவோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரஞ்சன் ராமநாயக்க விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ டுவிட்டர் தளத்தில் அண்மையில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

அதோடு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ரஞ்சனுக்காக கோரிக்கை ஒன்றையும் முன்வைத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.