மட்டக்களப்பு புன்னைக்குடா விஹாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை தகாத முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட விஹாரையின் பிரதம பிக்குவை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதிவான் நேற்று (08) உத்தவிட்டுள்ளார்.
குறித்த விஹாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனிடம் தகாத முறையில் நடந்துகொண்ட விஹாரையின் பிரதம பிக்கு வை கடந்த மாதம் 25 ஆம் திகதி பொலிஸார் கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை இன்று 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது கொரோனா காரணமாக அவர் நீதிமன்றில் அழைத்துவரப்படாத நிலையில் கணொளி மூலம் அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.