நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கை நபருடன் தங்கியிருந்தவரின் வாக்குமூலம்!

நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையருடன் ஒரே அடுக்குமாடி வீட்டில் வசித்த நபர் அவர் குறித்த அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஆக்லாந்தில் உள்ள கவுண்ட்டவுன் சூப்பர் மார்க்கெட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையர் ஒருவர் நடத்திய கத்தி குத்தி தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். இதன்பின்னர் தாக்குதல்தாரியை பொலிசார் அதே இடத்தில் சுட்டு கொன்றனர். அவரின் பெயர் Ahamed Aathill Mohammad Samsudeen (32) என தெரியவந்தது.

தொடர்ந்து Samsudeen தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆக்லாந்தில் 2017ல் Samsudeen உடன் ஒரே அடுக்குமாடி வீட்டில் வசித்த நபரிடம் தேசிய பாதுகாப்பு புலனாய்வுக் குழுவின் அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கின்றனர். விசாரணையில் Samsudeen குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

அவர் அதிகாரிகளிடம் கூறுகையில், நான் கடந்த 2017ல் பல மாதங்கள் அவருடன் சேர்ந்து தங்கியிருந்தேன். சிரியாவுக்கு எப்படி பயணம் செய்வது மற்றும் அது தொடர்பாக உதவ ஆட்களை எனக்கு தெரியுமா என அடிக்கடி Samsudeen கேட்பார்.

ABIGAIL DOUGHERTY/STUFF

மேலும் என்னை வெளிநாட்டுக்கு அனுப்பி ஐஎஸ் இயக்கத்தில் சேர தடை போட்டால் சாலையில் இறங்கி கத்தியால் குத்தி யாரையாவது கொல்வேன், எனக்கு வெடிகுண்டு எப்படி தயாரிக்க வேண்டும் என்பது கூட தெரியும் என கூறினார்.

இதோடு, இங்கேயே முடிந்தவரை சேதத்தை ஏற்படுத்த முயற்சிப்பேன் என என்னிடம் சொன்னார். அதற்கு நான் Samsudeenயிடம், உன் செயலால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கேட்டதற்கு, நியூசிலாந்தில் வாழும் அனைத்து மக்களும் kuffar (நம்பிக்கை இல்லாதவர்கள் மற்றும் அவதூறு பேசுபவர்கள் என பொருள்) என என்னிடம் கூறினார்.

ஒரு முறை Samsudeen கட்டிலில் படுக்கைக்கு அடியில் பெரிய கத்தி இருப்பதை கண்டேன். அந்த காட்சியை கண்ட பின்னர் அவர் என்னை கொன்றுவிடுவார் என பயம் ஏற்பட்டது. இதன்பிறகு தூங்கும் போதும் ஒரு கண்ணை திறந்து கொண்டே இருப்பேன், என் பெரும்பாலான நேரத்தை வீட்டுக்கு வெளியே தான் செலவழிப்பேன் என கூறினார்.

இதற்கு பின்னர் Samsudeen மீது கொண்ட அச்சத்தால் வீட்டை காலி செய்து அவர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.