பிக்பாஸ் லாஸ்லியா… கதாநாயகியாக அறிமுகமாகும் படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமான லாஸ்லியா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி உள்ள படம் ‘பிரெண்ட்ஷிப்’. இப்படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா நடித்துள்ளார். அவர் ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் அர்ஜுன், காமெடி நடிகர் சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

உதயகுமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை இந்தி, பஞ்சாபி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

இந்நிலையில், ‘பிரெண்ட்ஷிப்’ படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 17ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.