முடி உதிர்தல் இளநரையை தடுக்க இதை மட்டும் செய்யுங்க!

உடல் ஆரோக்கியம் போன்று கூந்தல் ஆரோக்கியத்துக்கும் உணவு தேவை. நம்ப முடியாத அளவுக்கு அற்புதமான கூந்தலை பெறுவதற்கு வீட்டில் செய்யகூடிய மிக முக்கியமான பராமரிப்புகள் உண்டு. அப்படி செய்ய வேண்டிய குறிப்புகள் பற்று இங்கு பார்ப்போம்….

கூந்தல் வளர்ச்சிக்கும் முடி உடைவதை தடுக்கவும் அதிகப்படியான தண்ணீரை குடிக்கவும். சால்மன் மீன், ஆளிவிதை எண்ணெய் பால் பொருள்களில் இருக்கும் மெலிந்த புரதங்கள், பழங்கள், மூல காய்கறிகள், பருப்பு வகைகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட உணவுகள் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்யும்.

அடுத்ததாக, முடி பராமரிப்புக்கு சிகைக்காய், எலுமிச்சை, தேங்காயெண்ணெய், வினிகர் போன்ற இயற்கையான முடி பராமரிப்பு பொருள்களை பயன்படுத்துங்கள். முடி பளபளப்பு குறையும் போது எலுமிச்சை சாற்றில் நீர்த்து முடியை அலசி எடுங்கள். பளபளப்பான கூந்தலை பெறுவதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து குளிக்கலாம்.

முடி உதிர்தல் பிரச்சனை இருக்கும் போது தேங்காய்ப்பால் அல்லது தேங்காயெண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்தலை கட்டுப்படுத்தலாம். பின்னர், கூந்தல் அதிகமாக வறண்டு இருந்தால் தேனுடன் ப்ரெஷ் ஃக்ரீம் கலந்து முடிக்கு மாஸ்க் போட்டு மந்தமான நீரில் அலசி எடுக்கலாம்.

கூந்தலை சுத்தம் செய்ய கெரட்டின். ரோஸ்மேரி, தாவர புரதங்கள் மற்றும் கடற்பாசி சாறு போன்ற மூலப்பொருள்களை கொண்ட இயற்கையான ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்துங்கள். தலைமுடியை ஈரப்பதமாக வைத்திருக்க ஷாம்புக்கு பிறகு சரியான கண்டிஷனரை பயன்படுத்துங்கள்.

இது கூந்தலை பளபளப்பாக வைத்திருந்து சிக்கலை நீக்கும். முடி ஈரமாக இருக்கும் போது அகன்றபல் கொண்ட சீப்பு பயன்படுத்துங்கள். கூர்மையான நெருக்கமான பற்கள் கொண்ட சீப்புகள் கூந்தலை சேதப்படுத்தும். கூர்மையான பற்கள் கொண்ட சீப்புகள் கூந்தல் முனை பிளவுகளை உண்டாக்கும். தலைமுடி உலர வைக்க குறைந்த வெப்பத்தில் தலைமுடியை உலர வைக்க வேண்டும்.

அதிக அளவு வெப்பம் பெரும்பாலான முடியை சேதப்படுத்தும். ஹேர் ட்ரையர்கள், கர்லிங் கருவிகள் அதிகமாக பயன்படுத்தினால் கூந்தலை சேதப்படுத்தும். கூந்தலை தினமும் 4 முறையாவது சீவுங்கள். இது உச்சந்தலை எண்ணெய் சுரப்பியை தூண்டுகிறது.

இயற்கையான எண்ணெயை ஊக்குவிக்கிறது. இறந்த உச்சந்தலையில் உள்ள திசுக்களை நீக்குகிறது. கூந்தலை 30 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறை வெட்டி அதன் வளர்ச்சியை ஊக்குவியுங்கள். இது இறந்த முனைகளை வெளியேற்றுவதால் முடி வளர்ச்சி பாதுகாப்பான முறையில் அதிகரிக்க செய்யும்.

முடி வளர்ச்சியை மேம்படுத்த தூய்மையான தேங்காயெண்ணெயுடன் உச்சந்தலையில் மசாஜ் செய்ய வேண்டும். எண்ணெயை இலேசாக சூடேற்றி கூந்தலுக்கு மசாஜ் செய்யுங்கள். சூடான எண்ணெய் பயன்பாட்டுக்கு பிறகு டவலை கொண்டு மூடி கூந்தலை அலசி எடுக்கவும்.

முடியின் இளநரை வரும் போது: முடி இளவயதில் நரைக்க தொடங்கி விட்டால் சிறிது மருதாணி, முட்டை, நீர்த்த எலுமிச்சை சாறு, காஃபி தூள் சேர்த்து கலந்து விடவும். இதை உச்சந்தலையில் மற்றும் தலைமுடியில் தடவி விடவும். பிறகு 45 நிமிடங்கள் கலந்து ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும்.