சூப்பர் மாடலால் கம்பி என்னும் காதலன்!

தன்னை ஒரு சூப்பர் மாடல் என்று மட்டும் கூறாமல் சினிமாவில் இருக்கும் பிரபலங்களையும் அவர்களது மனைவிகளையும் அசிங்கபடுத்தியபடி பேசி வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியபின், நடிகைகள் பற்றியும் அவதூறாக பேசி வெறுப்பேற்றி வந்தவர் மீரா மிதுன்.

சமீபத்தில் குறித்த சாதியை சேர்ந்த நடிகர் நடிகைகள் இயக்குநர்களை படுமோசமாக விமர்சித்து சினிமாவைவிட்டு நீக்கவேண்டும் என்று அவரது காதலர் அபிஷேக்குடன் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். எப்போது மீரா மிதுன் கைது செய்வார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் தலைமறைவாக இருந்தது தமிழக போலிசாருக்கு தெரியவந்துள்ளது.

கேரளாவில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் மறைந்திருப்பதை போன் சிக்னல் மூலம் கண்டறிந்த போலிசார் அந்த அறைக்கு சென்றே கைது செய்தனர். கைது செய்தநிலையில் கதறி வீடியோவையும் வெளியிட்டார்.

அவரை தொடர்ந்து அவரது காதலன் அபிஷேக்கும் கைது செய்து ஆஜர் படுத்தப்பட்டனர். தற்போது மீராமிதுன் மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். கொஞ்ச நஞ்ச ஆட்டம் போட்ட மீராமிதும் தற்போது போலிசார் தன்னை கொடுமைப்படுத்துகிறார்கள் என்று கூறி கத்தி பேசியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.