கமலைத் தொடர்ந்து களமிறங்கும் விஜய் சேதுபதி! அதுவும் இப்படியான ஒரு ரோலாம்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக திகழ்ந்து தற்போது மக்கள் செல்வன் என்ற பட்டத்தால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. பிட்சா, இதற்குத்தானே ஆசப்பட்டாய் பலகுமாரா போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து வந்தார்.

தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் பேட்ட, மாஸ்டர் படத்தில் நடித்ததை அடுத்து நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் வில்லனாக கமிட்டாகி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த நடிகர் பாலகிருஷ்ணாவிடன் ஒரு படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதி உப்பென்னா படத்தில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகினார்.