திண்டுக்கலில் ரஜினியின் 168வது படமான அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கேட்டு ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
தமிழ் சினிமா துறையில் முடிசூடா மன்னனாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் அரசியலுக்கு வருவார் வரமாட்டார் என்ற விவாதம் எப்போதும் சமூக ஊடகங்களில் சூடு பறக்கும்.
இந்நிலையில் அரசியலுக்கு வரமாட்டார் என்று உறுதியான நிலை எடுத்த பின்பும், அவரது ரசிகர்களிடம் உற்சாகம் குறையவில்லை. ரஜினி முடிவுக்கு கட்டுப்பட்டு அரசியலுக்கு தான் அவர் வரவில்லை. அவர் பட பர்ஸ்ட் லுக் கூட இன்னும் வரவில்லையே என்ற சோகத்தில் உள்ளனர்.
சமீபத்தில் திரைக்கு வந்த பல நடிகர்களின் FIRST LOOK கூட சமூக ஊடகங்களில் வந்து கலக்குகிறது. ஆனால் சினிமா துறையில் சூப்பர் ஸ்டாராக விடிவெள்ளியாக இருக்கும் ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் வரவில்லையே என ஆதங்கப்படுகின்றனர்.
இந்நிலையில் விரைவில் வெளிவர உள்ள அண்ணாத்தை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கேட்டு ரசிகர்கள் போர்க்கொடி தூக்கி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். திண்டுக்கல் நகரில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ரஜினியின் 168 வது படமான “அண்ணாத்த” படத்தை வரவேற்கும் வகையில், அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கேட்டு ஒட்டப்பட்டுள்ளது. இது திண்டுக்கல் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.








