அர்ஜென்டினாவில் உயரும் கொரோனா….

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அர்ஜென்டினா 8-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், அர்ஜென்டினாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது.

அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1.07 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அங்கு கொரோனாவுக்கு 2.51 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.