ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் எடையை முற்றிலுமாக குறைந்திருந்தார். அதன் பின்பு ஈஸ்வரன் படம் வெளியாகி இருந்தது.

பின்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, அடுத்ததாக கவுதம் மேனனுடன் கூட்டணி அமைக்க உள்ளார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் இப்படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை திடீரென மாற்றி உள்ளனர். அதன்படி இப்படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என புதிதாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் சிம்புவின் புதுவிதமான தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்டம் ரசிகர்களிடையே வைரலாகி நிலையில், என்ன சிம்பு இப்படி பாலா பட அளவுக்கு மாறிவிட்டாரே பதிவிட்டு வருகின்றனர்.