நாட்டின் வானிலை மாற்றம்!

இலங்கையில் இன்றைய (ஆகஸ்ட் 3) திகதி வானிலையில் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும்,நாட்டின் ஏனைய இடங்களில் பொதுவான வானிலை நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.