விபத்தால், கெரியரையே இழக்கும் அபாயம்.!

பிரபல நடிகையாக இருக்கின்ற யாஷிகா அவருடைய நண்பர்கள் மற்றும் தோழியுடன் பாண்டிச்சேரி விருந்தில் கலந்து கொண்ட பின்னர், சென்னைக்கு காரில் திரும்பியபோது மாமல்லபுரம் அருகே விபத்தில் சிக்கினர்.

அந்த கோர விபத்தில் அவருடைய தோழி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த யாஷிகா மற்றும் அவருடன் காரில் பயணித்த ஆண் நண்பர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாஷிகா படுகாயமடைந்துள்ளதாகவு ம், ஒருசில அறுவை சிகிச்சைக்கு பின் அவர் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், அவர் பழைய நிலைக்கு திரும்ப ஒரு வருடம் ஆகலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாஷிகாவை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, அவருக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்கலாமா என்று ஆலோசனை செய்து வருகின்றனர். நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது ராஜபீமா, உத்தமன், கடமையை செய், பாம்பாட்டம் போன்ற படங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.