பணிக்கு செல்வதற்கான பேருந்தை தவறவிட்டதால் அந்த பேருந்தை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்ற நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துள்ளான சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் திரியாய் சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தில் யுவதியொருவர் பலியானதுடன் மற்றுமொரு யுவதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மஹதிவுல்வெவ – மயிலகுடாவ பகுதியை சேர்ந்த கயானி மதுசானி (21 வயது) என்ற யுவதியே உயிரிழந்துள்ளதுடன், அவரது நண்பி படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில் யுவதியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.