மசாஜ் நிலையமொன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வாடிக்கையாளர் உயிரிழப்பு

மசாஜ் நிலையமொன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தலவத்துகொட பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான வாடிக்கையாளர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தலவத்துகொட ஸ்பா நிலையத்தில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மேற்படி வாடிக்கையாளரின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.

இதேவேளை மேற்படி நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

மேலும் அவரின் மரணத்துக்கான காரணத்தை அறிவதற்கு பிரேத பரிசோதனை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.