புதிய சீரியலில் சஞ்சீவ்க்கு ஜோடியாகும் நடிகை !

சன் தொலைக்காட்சியில் புத்தம் புதிய சீரியல்கள் நிறைய உருவாகி வருகிறது. அப்படி அண்மையில் பூஜையுடன் தொடங்கப்பட்ட ஒரு சீரியல் கயல்.

விஜய் டிவியில் ராஜா ராணி, காற்றின் மொழி போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமான சஞ்சீவ் இப்போது சன் டிவியில் கயல் என்ற புதிய சீரியலில் நாயகனாக நடிக்கிறார்.

அண்மையில் சீரியலுக்கான பூஜை மிகவும் சிம்பிளாக போடப்பட்டது. தற்போது இதில் நாயகியாக நடிப்பது யார் என்ற தகவல் வந்துள்ளது.

யாரடி நீ மோகினி என்ற ஜீ தமிழ் சீரியல் மூலம் பிரபலமான சைத்ரா ரெட்டி தான் கயல் சீரியலில் நாயகியாக நடிக்கிறாராம்.

அவரது படப்பிடிப்பு தள புகைப்படங்கள் சில வெளியாக ரசிகர்கள் அட இவரா சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)