இலங்கையில் இதுவரையில் 2500 கர்பிணி பெண்களுக்கு கொரோனா….

இலங்கையில் இதுவரை 2 ஆயிரத்து 250 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக குடும்பநல சுகாதாரப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக சிகிச்சை பெறுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.