சோள உருண்டை செய்வது எப்படி !

வறுக்கப்பட்ட சோளம், பருப்பு உருண்டையுடன் ரெட் கறி விழுது, ஸெஸ்டி காஃபிர் எலுமிச்சையும் சேர்த்து காரமாக்கப்பட்டது.
செய்முறை நேரம்: 15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
அளவு: நான்கு பேருக்கு

தேவையானவை :
— 100 கி. பாசிப் பருப்பு

— 30 மில்லி தேங்காய் பால்

— 10 கி. பனை வெல்லம்

— 80 கி. சோள முத்து

— 30 கி. ரெட் கறி விழுது

— காஃபிர் எலுமிச்சை இலைகள், சிறிதளவு

— உப்பு மற்றும் மிளகு சுவைக்கேற்ப

— 40 கி. டெம்புரா மாவு

— 2 தேக்கரண்டி மாவு

— 1 முட்டை வெள்ளைக்கரு அடித்துக்கொள்ளவும்

— 30 கி. வேகவைத்த அரிசி

— 300 மில்லி எண்ணெய், பொரிப்பதற்கு

— 1 தேக்கரண்டி மிளகாய் தூள்

— 2 தேக்கரண்டி மையோன்னைஸ்

செய்முறை
பாசிப் பருப்பை நன்றாக வேக வைக்கவும். தேங்காய்ப் பாலுடன் பனை வெல்லத்தை கலக்கவும்.
ரெட் கறி விழுதுடன் சோள முத்துகளை வேக வைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி பாசிப்பருப்பு கலவையுடன் சேர்க்கவும்.
காஃபிர் எலுமிச்சை இலைகளோடு உப்பு, மிளகை சேர்க்கவும். மாவை ஒட்டும் பதத்துக்கு வரும்வரை கலக்கவும்.
கலவையை சிறு வட்டமாக உருட்டிக்கொள்ளவும். அதை முட்டையின் வெள்ளை கருவில் தோய்த்து, அரிசியில் உருட்டவும்.
அதை கொதிக்கும் எண்ணெயில் இட்டு பொன் நிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
மிளகாய்த் தூளையும் மையோன்னைஸையும் சேர்த்து டிப்பிங் சாஸை தயாரிக்கலாம். சூடாக சோள உருண்டைகளை பரிமாறவும்.