விஜய் டிவியின் முக்கிய சீரியலில் நடிகை ரேவதி- வைரலாகும் புகைப்படம்

டப்பிடிப்புகள் எதுவும் நடக்காததால் திரையரங்குகள் எல்லாம் காலியாக இருக்கிறது. ஆனால் சின்னத்திரை படப்பிடிப்புகள் மட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் லாக் டவுன் இருந்தபோது சீரியல் படப்பிடிப்புகள் பாதி ஹைதராபாத்தில் நடந்து வந்தது.

இப்போது மீண்டும் பழையபடி இங்கேயே படப்பிடிப்பு நடக்கிறது. புத்தம் புதிய சீரியல்கள் அதிகம் எல்லா தொலைக்காட்சியிலும் வருகின்றன.

தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் ராஜபார்வை சீரியல் நடிகைகளுடன் திரைப்பட நடிகை ரேவதி இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனால் ரசிகரகள் ரேவதி சீரியலில் நடிக்கிறாரா அல்லது இது பழைய புகைப்படமா என கேள்வி எழுப்பி கமெண்ட் செய்து வருகின்றனர்.