இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ள நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மருத்துவ நிபுணர்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனாலும், இதையும் மீறி கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இங்கிலாந்து அரசு தயாராகி வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். லேசான அறிகுறிகளுடன் தொற்று பாதித்துள்ள அவர், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை பிரதமர் போரிஸ் ஜான்சன் இல்லத்திற்கு ஜாவித் சென்றதாகக் கூறப்படுகிறது. எனினும், பிரதமர் போரிஸ் ஜான்சனை நேரடியாக ஜாவித் சந்தித்தாரா என்பது பற்றி அவரது செய்தி தொடர்பாளர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.