பிரபல விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக்வித் கோமாளி 2 சீசன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த சீசனில், நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.
இதில், வைல்ட் கார்ட் போட்டியாளராக களமிறக்கப்பட்டவர் ரித்திகா. பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த 3 வாரங்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.
இதையடுத்து, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா ரசிகர்களுடன் உரையாடியபோது, நீங்களும் பாலாவும் காதலிக்கிறீர்களா? என நிறையப் பேர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த ரித்திகா, எதை வச்சு நீங்க இப்படி கேக்குறீங்கன்னு தெரில. திரையில் வரும் ஒவ்வொரு விஷயமும் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காகத் தான். ஒவ்வொரு நடிகருக்கும் இதுவே நோக்கம்.
மேலும், வேறு எந்த நோக்கமும் இல்லை, நீங்கள் அதை ரசிக்கணும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை. பாலா எனக்கு நல்ல நண்பர் என தெரிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி 3-ல் கலந்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு, தெரியலையே என பதிலளித்திருக்கிறார்.