பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. இதனால், பலர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 186,845,446 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரசால் 4,035,177 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 170,900,883 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசிலில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 817 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,07,52,950 இருந்து 3,07,95,716 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,98,88,284 இருந்து 2,99,33,538 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,05,939 இருந்து 4,07,145 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.