சினிமாவில் இரட்டை நடிகர்களின் ஆதிக்கம் சினிமா துவங்கியது முதல் இன்று வரை இருந்து வருகிறது. அதிலும் தமிழ் சினிமாவில் சிவாஜி – எம்ஜிஆர், கமல்-ரஜினிகாந்த், தற்போது அஜித்- விஜய் என்று இரட்டை நடிகர்கள்ன் அதிக்கமும் ரசிகர்களும் அதிகமாகி இருந்தனர்.
அதில் ரஜினி-கமல் அப்போது இப்போது இருந்த காலகட்டத்தில் விஜயகாந்த், ராமராஜன் இருவரும் பிரபலமாகி அவர்களுக்கு இணையாக இருந்து வந்தனர். ஆனால் கமல் ரஜினிக்கு முன்பே கொடிகட்டி பறந்த நடிகராக ஒருவர் திகழ்ந்து வந்தார்.
என்ன பெத்த ராசா என்ர படத்தின் மூலம் லுங்கியை டிரெளசர் தெரியுபடி கட்டி கொண்டு கம்பீரமாக தொடையை அடிக்கும் நடிகர் தான் ராஜ் கிரண். ரஜினி கமலுக்கு சவால்விடும் அளவிற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகராக திகழ்ந்தார். மாணிக்கம் என்ற படத்தில் தான் அவருக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவரளித்த பேட்டியொன்றில் சினிமாவில் பஞ்சம் பிழைக்க வந்தவன் தான் நான் என்று கூறியுள்ளார். அதன் பிற்கு தான் தமிழில் 25 படங்களுக்கு மேல் கதாநாயகனாக திகழ்ந்தேன் என்று கூறியுள்ளார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தும் இன்று வரை ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகர் ராஜ் கிரண்.








