நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கொரோனாவிலிருந்து, நம்மை காக்கும் ஆயுதமாக தடுப்பூசிகள் விளங்குகின்றன என்று மருத்துவத்துறையினர் பரிந்துரைக்கின்றனர். இந்த நிலையில், இன்று மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் ஏற்பாடு செய்த தடுப்பூசி முகாமில் நடிகை ஷில்பா ஷெட்டி தனது இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
இதனிடையே தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள மக்கள் சிலர் அச்சப்பட்டு தவிர்த்து வருகின்றனர். இதனால், மக்களின் அச்சங்களை போக்குவதோடு, தங்களையும் காத்துக்கொள்ள திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதோடு, அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.







