காட்டுத்தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலான கனடா நகரம்… ஒட்டுமொத்த மக்களும் வெளியேற்றம்!

கனடாவில் காட்டுத்தீயில் ஒரு நகரம் முற்றிலும் எரிந்து சாம்பலானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சிறிய நகரமான லிட்டன் கட்டுத்தீயில் அழிந்துள்ளது.

லிட்டன் நகரம் வான்கூவர் நகருக்கு வடகிழக்கில் 260 கிலோமீட்டர் (161 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

24 மணி நேரத்திற்குள் 62 புதிய தீ விபத்துக்கள் ஏற்பட்டன. டவுன் சென்டர் உட்பட 90% லிட்டன் நகரம் எரிந்துவிட்டதாகவும், 1,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட லிட்டன் நகரத்துக்கு உதவி அளிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.

தீ விபத்துக்கு முன்னர் லிட்டன் நகரில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் அதிகபடியாக வெப்பம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

செவ்வாயன்று, வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸை தாண்டியது. Alberta, Saskatchewan, Manitoba மற்றும் வடமேற்கு பிரதேசங்களின் பகுதிகள் மற்றும் இப்போது வடக்கு ஒன்ராறியோ மாகாணங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.