பிரான்சில், செப்டம்பரில் கொரோனா 4-ம் அலை ஏற்பட வாய்ப்பு… அதிர்ச்சி தகவல்!

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா புதுப்புது அவதாரம் எடுத்து மக்களை வேட்டையாடி வருகிறது. பிரான்சில் ஏற்கனவே 3 அலைகளாக உருமாறி காவு வாங்கிய கொரோனா, வரும் செப்டம்பர் மாதத்தில் 4-ம் அலையாக உருவெடுக்கும் என்று அறிவியல் ஆலோசகர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரான்சில் கடந்த சில நாட்களாக டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது 4-வது அலைக்கு வித்திடும். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் 4-வது அலையின் வீரியம் அதிகமாக இருக்கும் என அரசின் அறிவியல் ஆலோசகரும், பேராசிரியருமான ஜீயன் பிரான்சிஸ் டெல்பிரைசி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இதில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும், தடுப்பூசி போடுவதை தீவிரபடுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.