ஐஷ்வர்யா ராஜேஷை Prank செய்த ஐஸ்கிரீம் கடைகாரர் !

என்னதான் முன்னாடி பல படங்களில் நடித்திருந்தாலும், காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.

இந்தநிலையில், மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பாடகி சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஜெயம் கொண்டான் பட இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் டிராவலிங் எவ்வளவு மிஸ் செய்வதாக கூறி பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவர், ஐஸ்கிரீம் கடைக்காரர் ஒருவரிடம் மொக்கை வாங்குவதுபோல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.