யாரடி நீ மோகினி’ ஸ்வேதாவின், தாவணி புகைப்படங்கள்.!

ஜீ தமிழ் டிவியில் வித்தியாசமான கதையுடன் விறுவிறுப்பாக நிறைய சீரியல்கள் சென்று கொண்டிருக்கின்றன. அப்படி வெளியான சீரியல்களில், மிகவும் வரவேற்பு பெற்ற சீரியல் தான் யாரடி நீ மோகினி.

ஆயிரம் எபிசோடுகளை கடந்து அந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வில்லியாக நடித்து அனைவரையும் மிரள வைத்தவர் தான் நடிகை சைத்ரா ரெட்டி.

விஜய் டிவியில் காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் நடித்து அறிமுகமான அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால், யாரடி நீ மோகினி சீரியலில் ஸ்வேதாவாக நடித்த பிறகுதான் அவருக்கு நிறைய ரசிகர்கள் உருவாகினர். அவர் சுறுசுறுப்பாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அவர் வீடியோக்கள் மிகவும் பிரபலமானது.

தற்போது அவர் உடல் எடையை மிகவும் குறைத்து தாவணி பாவாடையில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை பிடித்து வருகின்றார்.