ஊஞ்சல் கயிற்றில் இறுகி… சிறுமி மரணம் !!

ஊஞ்சல் ஆடிய சிறுமியின் கழுத்தில் ஊஞ்சல் கயிறு இறுகியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு சின்ன உப்போடை பகுதியிலேயே இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
கயிறு இறுகிய நிலையில் மயக்கமுற்ற சிறுமியை கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.