இலங்கையில் மேலும் 40 பேரை பலியெடுத்தது கொரோனா..

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெண்கள் 17 பேரும் ஆண்கள் 23 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,696 ஆக அதிகரித்துள்ளது.