தீப்பற்றிய கப்பலால் நெருக்கடி- பிரித்தானியாவிடம் சரணடைந்த ஜனாதிபதி…!!

ஸ்ரீலங்கா கடற்பரப்பில் தீப்பிடித்து எரிந்த எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட நெருக்கடிக்கு தீர்வுகாண ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரித்தானியாவிடம் உதவி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த உதவிகள் கிட்டுவதற்கு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் தடையாக இருப்பதை உணர்ந்து சில தந்திரங்களை பிரயோகித்த நிலையில் இந்த நகர்வுகளை முன்னெடுப்பதாகவும் அரசியல் வட்டாரங்களிலிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவு வெளியேறுவது போதாது என்று தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமான சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு தாங்கிளில் இருந்தும் எண்ணெய் கசிந்து மழை நீருடன் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே இந்த எண்ணெய்க் கசிவு களனி ஆற்றில் கலந்து பேரழிவு ஏற்பட்டுவிடும் எனவும் இதனைத் தடுக்க ஏதாவது செய்யுங்கள் என ஸ்ரீலங்கா கடற்படைக்கு மேலிடத்தால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கப்பலில் இருந்து விழுந்து கரையொதுங்கியுள்ள டொன் கணக்கான பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் வேலையில் ஈடுபட்டிருக்கும் கடற்படையினருக்கு இப்போது களனி கங்கையையும் சுத்தம் செய்யும் வேலை சுமத்தப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் பிரித்தானிய எல்லைக்குள் பிரவேசிக்க ஸ்ரீலங்காவிற்கு தடை என பிரித்தானிய அரசும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கப்பலால் ஏற்பட்ட நெருக்கடிக்ககு தீர்வுகாண உதவி வழங்குங்கள் என கோட்டாபய நேற்றைய தினம் கொழும்பிலுள்ள பிரிதானிய இராஜதந்திரியை தனது ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே இந்த சிவப்பு பட்டியல் அறிவிப்பு வெளியாகியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.